பந்திக்கு முந்து!!

பந்திக்கு முந்தி படைக்கு பின்துன்னு ஒரு பழமொழியே இருக்கு. ஆனா அது என்னனு இப்போ தான் புரிஞ்சுது. சமிபத்துல கேரளாவுக்கு  ஒரு friend ஓட friend கல்யாணத்துக்கு போயிருந்தோம். ஏதோ friend company  கேட்டாளே , கேரளாவும் பாத்தது இல்லையேன்னு கிளம்பி போயாச்சு. அதுவ்வும் கேரளா சத்யம் கேள்வி பட்டிருக்கீங்களா. கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் ஏன்னா கேரளா மெஸ் இல்லாத இடம் இல்ல, கேரளா மக்கள் இல்லாத இடமும் இல்ல. இந்த சத்யம்ல சும்மா items வைப்பாங்க பாருங்க! அவியல், தோரன், ஒலன், புளிசெர்ரி , எரிசெர்ரி, சிகப்பு அரிசி, அடை பிரதமன்னு ஒரு பெரிய listஏ இருக்கு. அதனால காணாத கண்ட மாதிரி கல்யாண சாப்பாடு கிடைக்குதுனு  கேரளாக்கு கிளம்பி  போயாச்சு.
 
கேரளா கல்யாணம்னா நிறைய நகை எல்லாம் போட்டுட்டு, சும்மா ஜொலி ஜொலிப்பாங்க, நாமா அதுக்கு ஏத்த மாதிரி எல்லாம் போலே நாலும் , ஏதோ decent -ஆ ஒரு dress போட்டுட்டு போய் நின்னோம். பாத்தா பொண்ணு மட்டும் தான் நகை கடை விளம்பரம் மாதிரி இருந்தாங்க. நாட்டுல எல்லாரும் ரொம்ப modern ஆகிட்டாங்க பா! அவங்க கல்யாணம் ரொம்ப simple. டக்குன்னு தாலிய கட்டுவாங்க, சுத்தி வருவாங்க முடிஞ்சுது. நாங்க போனது என்னவோ சாப்பிடறதுக்கு மட்டும் தான்னாலும், correctஆ  அந்த டைம்க்கு போனா நல்லா இருக்காதேன்னு சொல்லி, கொஞ்சம் முன்னாடியே கிளம்பி போய் உட்கார்ந்துகிட்டோம். தாலி கட்டின உடனே gift குடுக்க எல்லாரும் queueல நிப்பாங்க நமக்கு late  ஆகிடுமேனு  நினைச்சு என் friend கிட்ட போடி போடி போய் gift குடுத்திட்டு வான்னு அவசர படுத்தினேன். அவ எந்திருக்குறதுக்குள்ள  திம்மு திம்முன்னு queue form ஆகிடுச்சு. Queue சின்னது ஆகட்டும்டின்னு திரும்ப உட்கார்ந்திட்டா. அடடா அங்க பிரதமன் ஆரி போயிடுமேன்னு கவலை பட்டுட்டு இந்த queue எப்போ நகுருமோனு பாத்திட்டு இருந்தேன்.   திடீர்னு ஒரு கதவு ச்வர்க வாசல் மாதிரி திறந்துச்சு queueல நின்ன எல்லாரும் அடிச்சு பிடிச்சு உள்ள ஓடின்னாங்க, ஒரு நிமிஷதுல அந்த மாய கதவு திரும்பவும் பூட்டிகிச்சு ! என்ன ஒரு அதிசயம்! இப்ப என்னடி நடந்திச்சு, அப்படின்னு ஒருத்தருக்கு ஒருத்தர் முழிச்சிட்டு இருந்தோம். அப்போ தான் புரிஞ்சுது, queue gift குடுக்க இல்ல, பந்திக்கு!! அடடா இது தான் விஷயமா!!என் friendஏ மட மடன்னு போய்  first gift குடு, அடுத்த பந்தி உள்ள போயே தீரணும். திடீர்னு பாத்தா நாங்க மட்டும் ஒரு ஓரமா உட்கார்ந்து இருக்கோம் மித்தவங்க  எல்லாம் chairஏ தூக்கிட்டு மர்ம கதவு பக்கதுல போய்  போட்டு உட்கார்ந்துகிட்டாங்க . இது சரி பட்டு வராது போல இருக்கே! chairஏ தூக்கிட்டு போயிடலாமான்னு மன  கணக்கு போட்டுட்டு இருக்கும்போதே திடீர்னு எல்லாரும் எந்திருக்குறாங்க மர்ம கதவு கொஞ்ச நேரத்துல திறக்குது எல்லாரும் அலறி அடிச்சு உள்ள போறாங்க கதவு பூட்டிகிச்சு! இந்த வாட்டியும் பந்தி போச்சான்னு வாய பாத்துட்டு உட்கார்ந்துட்டோம். கூட்டத்தோட ஒன்றி இணைவோம்ன்னு chairஏ தூக்கிட்டு கதவு கிட்ட போய் உட்கார்ந்துகிட்டோம்.   இதுல என்ன விஷயம்னா ஒரு பந்திக்கும் இன்னொரு பந்திக்கும் நடுவுல அரை மணி நேரம் போகுது.இப்படியே வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன் கேரளா சத்யாவ இன்னும் பாக்கலையேன்னு பாட்டு பாடிட்டு இருந்தோம். நேரம் ஆச்சு! உள்ள எல்லாரும் எந்திரிக்குறாங்க! வேற இலை போடுறாங்க! ஏதேதோ item  வைக்குறாங்க! எல்லாரும் உஷாரா எந்திருக்குறாங்க!! நாங்களும் கூட்டத்தோட உஷாரா எந்திரிகிறோம்! கூட்டம் கூடுது! ஆம்பள பொம்பள சேச்சி சேட்டன் வித்யாசம் இல்லாம மேல விழுந்து தள்ளுறாங்க! மர்ம கதவு திறக்குது. ஆய் சீட்ட பிடி சீட்ட பிடின்னு எல்லாரும் ஓடுறாங்க!! நாங்க எந்த பக்கம் ஓடுறதுன்னு யோசிக்கிறோம்! ஒரு cornerல ஒரு table கண்ணுக்கு தெரியுது! Aunty uncle எல்லாம் அவ்ளோ தூரம் ஓட முடியாது அதுக்குள்ள நாம ஓடிறலாம்னு  ஓடுறோம். திடீர்னு என் friend இங்க seat இருக்கு வான்னு கை காட்ட நான் திரும்ப. அங்க போறதுக்குள்ள ஒரு தாத்தா அவள வெரட்ட!! ஐயோ பிரதமன் காலி ஆகிடுமேன்னு வேற seat தேட! last row நோக்கி ஓட!! அஞ்சு seat இருந்திச்சு! அஞ்சு!! ஒரு aunty நான் உள்ள போய்க்குரேனு போச்சு!! பின்னாடி பையன் வந்தான்! அப்படியும் எங்களுக்கு தேவை மூணு seat அது இருந்திச்சு! சரி பையன் போனான். பின்னாடி அது என் husband அப்படின்னு ஒரு அம்மா கொழந்தைஒட வந்திச்சு! இந்த அம்மாக்கு seat குடுத்தா போச்சேன்னு யோசிக்க! அந்த அம்மா குடு குடுன்னு போய் உட்கார்ந்திருச்சு!! நாங்க மலங்க மலங்க முழிக்க அந்த அம்மா சேச்சி பாட்டி அப்படின்னு எல்லாரையும் கூப்பிட்டு இருந்த seat குடுத்திருச்சு!! ஊரே எங்கள லூஸ் மாதிரி பார்க்க! மர்ம கதவு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கானு முழிக்க! கதவு  பூட்டுறவரு  வெளியே  போறீங்களானு பார்க்க!! அடுத்தவங்க இலைய  பார்த்துட்டே வெளியே வந்துட்டோம்!! கதவு பூட்டிட்டாங்க!! வெளியே தள்ளி கதவ பூட்டிட்டாங்க!!
 
பந்திக்கு முந்த தெரியாத அப்பாவி மக்கள்! இது வேலைக்கு ஆகாது மச்சி மரியாதையா நாம ஹோடெல்ல போய் சத்யம் சாப்பிட்டுக்கலாம் அப்படின்னு சொல்லி பாத்தேன்! கேக்கலையே!! கல்யாண வீட்டுக்கு வந்திட்டு சாப்பிடலன்னா எப்படிப்பா!! மச்சி கொஞ்ச நேரத்துல ஹோடெல்ல கூட சாப்பாடு கெடைக்காது கிளம்பு போய்டலாம்! நோ நோ நோனு பிடிவாதம் பிடிக்க! சரி அடுத்த பந்தி எப்படி பிடிக்கறதுன்னு plan போடுவோம். Chair கதவு பக்கத்துல போட்டுக்கிடோம். எப்போ இலை எடுக்குறாங்க எப்போ அடுத்த இலை போடுறாங்க எப்போ கதவு திறக்குற ஆளு வராருன்னு உஷாரா பாத்துட்டு இருந்தோம்! திரும்பவும் அசிங்க பட்டா என்னடி பண்லாம்?? அரசியல்ல இதேல்லாம் சகஜம்டி வா வானு போக! கதவு திறந்திச்சு! கடைசி பந்தி வரு வரு !! பிரதமன்! oh my  gawdddddddd!! கடைசி பந்தியா!! ஓடி ஓடி கிடைச்சை சீட்ட பிடிச்சு ஒரு வழியா உட்கார்ந்துட்டோம்! கூட்டம் இல்ல you see! இத்தன போராட்டத்துக்கு அப்புறம் சாப்பாடு மட்டும் நல்லா இல்லாம இருந்திச்சு!! எல்லாம் ஒரு ஒரு ஸ்பூன் மட்டுமே வச்சாலும் செமயா இருந்திச்சு.. என்ன டக்கு டக்கு டக்குன்னு சாப்பிட சொல்லிட்டாங்க .. சாம்பார், சிகப்பு அரிசி, ஓலன், தோரன் எல்லாம் போட்டாங்க..   அவசரத்துல எது என்னன்னு தெரியாம, பக்கத்து இலைய காமிச்சு அது கொண்டு
வாங்க இது கொண்டுவாங்கனு கேட்டு வாங்கிக்கிட்டேன்.  நல்லா சாப்பிட்ட அப்புறம் அடை பிரதமன்னும் வந்திச்சே வந்திச்சே!! பீடா எல்லாம் போட மாட்டாங்க போல. ஏதோ அடிச்சி பிடிச்சி ஒரு வழியா சாப்பிட்டு  முடிச்சிட்டோம்!!! என்ன தெரிஞ்சவங்க கல்யாணத்துல குட இவ்ளோ நேரம் இருந்திருக்க மாட்டேன்! பந்திக்கு முந்துரதுக்குல ரணகளம் ஆகிடுச்சு பா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow @masalaboxtravel

Help me run the Site

UPI payments work